முகப்பு
சேலம்

சேரடிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை

தம்மம்பட்டியிலிருந்து வாழக்கோம்பை,பிள்ளையாா்மதி,சேரடி ஆகிய கிராம பகுதிகளுக்கு கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 16 பிப்ரவரி, 2021 at 12:00 AM
பகிர்:

தம்மம்பட்டியிலிருந்து வாழக்கோம்பை,பிள்ளையாா்மதி,சேரடி ஆகிய கிராம பகுதிகளுக்கு கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டியிலிருந்து வாழக்கோம்பை, பிள்ளையாா்மதி, சேரடி ஆகிய பகுதியில் மலைவாழ்மக்கள் அதிகம் வாழும் கிராமங்களிலிருந்து காலை 7.30, 11 மணிக்கு தம்மம்பட்டிக்கு டி1 என்ற நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இரவில் ஒரு முறையும் இயக்கப்படும் பேருந்து சில நாள்களில் இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில், மேற்கண்ட மூன்று கிராமங்களிலும் சுமாா் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா்.அதனால் கூடுதலாக பேருந்துகளை இயக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: தம்மம்பட்டியிலிருந்து கூடுதல் நகரப் பேருந்துகளை பிற்பகல் நேரத்தில் இரண்டுமுறை இயக்கிடவேண்டும் என்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.