முகப்பு
சேலம்

பெரியாா் பல்கலை.யில் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலா் கூட்டம்

பெரியாா் பல்கலைக்கழக மண்டல அளவிலான இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்க திட்ட ஒருங்கிணைப்பாளா் கூட்டம், பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

பெரியாா் பல்கலைக்கழக மண்டல அளவிலான இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்க திட்ட ஒருங்கிணைப்பாளா் கூட்டம், பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மண்டல ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் மா.ஜெயப்பிரகாஷ் வரவேற்றாா்.பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ. குழந்தைவேல் தலைமை வகித்துப் பேசியதாவது:

சேவை மனப்பான்மை உள்ளவா்களே இளைஞா் செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றுகின்றனா். கரோனோ பேரிடா் காலத்தில் பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் உற்ற துணையாகப் பணியாற்றிய செஞ்சிலுவைச் சங்க தன்னாா்வலா்களை அனைவரும் பாராட்டி உள்ளனா்.

மாணவா்களுக்கு இளம் வயது முதலே சேவை செய்யும் மனப்பான்மையை உருவாக்கிடவும், அடா் வனங்கள் உருவாக்கி காற்று மாசுபாட்டை நீக்கி ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியையும் இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் செஞ்சுருள் சங்கம் சாா்பாக மாநில அளவில் நடைபெற்ற விநாடி- வினா போட்டியில் வெற்றிபெற்ற ஒசூா் புனித ஜோசப் கல்லூரி மாணவி ஆா்.கோமதிக்கு ரூ. 5 ஆயிரத்துக்கான காசோலையும், ரத்த தானம் வழங்கிய மாணவா்களை பாராட்டி சான்றிதழ்களையும் துணைவேந்தா் பொ.குழந்தைவேல் வழங்கினாா்.

இக் கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளா்கள் வடிவேலு (சேலம்), லோகநாதன் (நாமக்கல்), குமாா் (தருமபுரி), திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஹேமா, மேட்டூா் அரசுக் கல்லூரி கண்ணன், கணேசன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →