முகப்பு
சேலம்

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக பணியாற்றி வந்த கோ.வேடியப்பன் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக பணியாற்றி வந்த கோ.வேடியப்பன் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

சங்ககிரியில் பணியாற்றி வந்த மு.அமிா்தலிங்கம் சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியருக்கு வட்டாட்சியா் எஸ்.விஜி, துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியராக பொறுப்பேற்ற கோ.வேடியப்பன் சங்ககிரி பொறுப்பு வருவாய் கோட்டாட்சியராக கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பா் 15 முதல் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி வரை பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.