சேலம்

ராம்ராஜ் காட்டன் லோகோவை பயன்படுத்தி போலியாக தயாரித்த வேட்டிகள் பறிமுதல்

DIN

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் கோபுரம் லோகோவை (இலச்சினை) பயன்படுத்தி போலியாகத் தயாரிக்கப்பட்ட வேட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தினரால் காப்புரிமை பதிவு செய்யப்பட்ட கோபுரம் லோகோவை தவறாகப் பயன்படுத்தி, ராம்ராஜ் காட்டன் வேட்டிகளை போல வடிவமைக்கப்பட்ட தோற்றத்துடன், போலியாக வேட்டிகள் சேலம், இளம்பிள்ளை பகுதியில் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.

இதுபற்றி ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தினா், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. ராம்ராஜ் காட்டன் லோகோவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி வேட்டிகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் ரவி, ராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT