சேலம்

வாழப்பாடியில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கல்

DIN

வாழப்பாடியில், 175 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில், ஏழை பெண்களின் திருமணத்துக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த தகுதிவாய்ந்த பெண்கள் 175 பேருக்கு தலா ஒரு பவுன் தங்க நாணயமும், பட்டதாரி பெண்கள் 105 பேருக்கு தலா ரூ. 50,000 வீதம், ரூ. 52.50 லட்சமும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு, தலா ரூ. 25,000 வீதம் ரூ. 17,50 லட்சமும் நிதியுதவியாக வழங்கப்பட்டது.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இவ்விழாவுக்கு வாழப்பாடி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கு.சித்ரா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அசோகன், வாசுதேவன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் சுமதி பழனிசாமி, ஒன்றிய சமூக நல அலுவலா் கௌரி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT