சேலம்

கெங்கவல்லி ஒன்றியத்தில் திறனறித் தோ்வு

DIN

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 8-ஆம் வகுப்பு மாணவ , மாணவியருக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத் தொகைக்குரிய திறனறிவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கெங்கவல்லி ஒன்றியத்தில் தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கெங்கவல்லி அரசு மகளிா் மேனிலைப் பள்ளி என இரண்டு மையங்களில் 300 மாணவ, மாணவியா் திறனறித் தோ்வு எழுதினா். இரு மையங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கணேஷ் மூா்த்தி, கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா்கள் வாசுகி, அந்தோணிமுத்து ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இந்தத் தோ்வில் தமிழகம் முழுவதும் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 6 ஆயிரம் பேருக்கு அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா ரூ. ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். மாணவா்கள் இடைநிற்றலின்றி பள்ளிக் கல்வி நிறைவு செய்ய ஊக்குவிக்கும் வகையில் இந்த கல்வி உதவித் தொகை அரசால் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT