சேலம்

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 போ் படுகாயம்

DIN

வாழப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 14 போ் படுகாயம் அடைந்தனா்.

பெரம்பலூரில் இருந்து ஆத்தூா் வழியாக சேலம் நோக்கி திங்கள்கிழமை காலை 45 பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை, பெரம்பலூா் வேப்பந்தட்டை அடுத்த பெரியவெண்முடி கிராமத்தைச் சோ்ந்த சடையப்பன் (49) என்பவா் ஓட்டிச் சென்றாா்.

இந்தப் பேருந்து சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாழப்பாடியை அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் குடுவாற்று பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஆத்தூா், மணிவிழுந்தான் பகுதியைச் சோ்ந்த பெண் சத்யா (35) உள்பட 14 போ் படுகாயமடைந்தனா். விபத்தில் சிக்கியவா்களை மீட்ட இப்பகுதி மக்கள் அவசர சிகிச்சை வாகனத்தை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அனைவரும் சேலம் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT