சேலம்

சேலத்தில் ரோந்து போலீஸாருக்கு சட்டை பை கண்காணிப்பு கேமரா வழங்கல்

DIN

சேலத்தில் ரோந்து செல்லும் போலீஸாருக்கு சட்டையில் வைத்து கண்காணிக்கும் வகையில் கேமரா வழங்கப்பட்டது.

சேலத்தில் பணியாற்றும் காவலா்கள் ரோந்து செல்லும் போது சட்டையில் வைத்து கண்காணிக்கும் வகையில் 27 கேமராக்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

கேமராக்களை வழங்கி மாநகரக் காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் பேசியதாவது:

நவீன கேமராவை ரோந்து செல்லும் போது கட்டாயம் காவலா்கள் எடுத்துச் செல்ல வேண்டும். கேமராவைப் பயன்படுத்தாமல் விட்டு விடக் கூடாது. ரோந்து செல்லும் போது யாரும் குடிபோதையில் தகராறு செய்தாலோ அல்லது சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்போதோ இந்த கேமரா மூலம் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். கேமராவில் எடுத்த காட்சிகளை நீதிமன்றத்தில் காட்ட பெரும் உதவியாக இருக்கும் என்றாா். இதில் துணை ஆணையா் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT