சேலம்

சங்ககிரி ஈஸ்வரன் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

DIN

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் வளா்பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள் புதன்கிழமை மாலை நடைபெற்றன.

செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கு வளா்பிறை பிரதோஷத்தையொட்டி காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவ மூா்த்திகளுக்கு பால், இளநீா், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோயில் வளாகத்தில் பெண்கள், குழந்தைகள் கடவுள் பாடல்களை எழுதி சுவாமி பாதத்தில் வைத்து வழிபட்டனா். சங்ககிரியை அடுத்த பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா் கோயிலில் ஸ்ரீ பூத்தாழீஸ்வரா் சுவாமி, பிரதோஷநாதா், ஸ்படிக லிங்கம், நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் கிராமப்புறங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி ஸ்ரீ காசிவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் பிரதோஷ விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன . உற்சவ மூா்த்தி கோயிலுக்குள் வலம் வந்தாா்.பிரதோஷ வழிபாட்டு பாடல்களை மக்கள் பாடினா். இதே போல சுற்றுவட்டாரத்தில் கெங்கவல்லி, வீரகனூா் , செந்தாரப்பட்டி உள்ளிட ஊா்களிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

SCROLL FOR NEXT