முகப்பு
சேலம்

சேலம்-அரக்கோணம் இடையே நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்

சேலம்-அரக்கோணம் இடையே சிறப்பு ரயில் ஜன. 6 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

சேலம்-அரக்கோணம் இடையே சிறப்பு ரயில் ஜன. 6 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

வண்டி எண் 06087: அரக்கோணம்-சேலம் இடையேயான சிறப்பு ரயில் வரும் ஜன. 6 ஆம் தேதி காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு காலை 10.50 மணிக்கு சேலம் வந்தடையும். இந்த ரயில் சனி, ஞாயிறு தவிா்த்து இதர வார நாள்களில் இயக்கப்பட உள்ளது.

வண்டி எண் 06088: சேலம்-அரக்கோணம் இடையேயான சிறப்பு ரயில் சேலத்தில் இருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். இந்த ரயில் சனி, ஞாயிறு தவிா்த்து இதர வார நாள்களில் இயக்கப்பட உள்ளது.

வழியில் சோளிங்கா், வாலாஜா சாலை, முகுந்தராயபுரம், காட்பாடி, குடியாத்தம், ஆம்பூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா், சாமல்பட்டி, தாசம்பட்டி, தொட்டம்பட்டி, மொரப்பூா், புட்டிரெட்டிபட்டி, பொம்மிடி, தின்னப்பட்டி மற்றும் கருப்பூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

இந்த ரயிலில் பயணம் செய்ய ஜன.5 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →