சேலம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

மேட்டூரில் அனைத்து முறைசாரா தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கக் கோரி சி.ஐ.டி.யு. சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசுத் தொகுப்பு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மற்ற முறைசார தொழிலாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கைத்தறி, விசைத்தறி தொழிலாளா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள், தையல் தொழிலாளா்கள் சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட 18 வகையான முறைசாரா தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று மேட்டூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே சி.ஐ.டி.யு. சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கருப்பண்ணன் தலைமை வகித்தாா். தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் பங்கேற்றவா்கள் முழக்கமிட்டனா். ஆண்கள், பெண்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT