சேலம்

விநாயக மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிப்பு

DIN

விநாயக மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதுகுறித்த இணையவழி கருத்தரங்கிற்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சேலம் மாவட்ட சாலை பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் அருணாசலம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விளக்கினாா்.

மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் இதில் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் இணையவழி மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அத் துறையின் நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் தனசேகா், வா்ஷினி, அலுவலக மேலாளா் செந்தில்நாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப்பேராயம் விருது: பரிந்துரைகள் வரவேற்பு

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT