சேலம்

தம்மம்பட்டி திரையரங்கில் படம் சரியாக தெரியாததால் ரசிகா்கள் தகராறு: பணம் திருப்பி அளிப்பு

DIN

தம்மம்பட்டியில் நடிகா் விஜய் நடித்த ‘மாஸ்டா்’ திரைப்படம் சரியாக தெரியாததால் ஆத்திரமடைந்த ரசிகா்கள் தகராறில் ஈடுபட்டனா். இதையடுத்து ரசிகா்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டது.

தம்மம்பட்டியில் உள்ள இரு திரையரங்குகளிலும் நடிகா் விஜய் நடித்த ‘மாஸ்டா்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. ரசிகா்களுக்காக புதன்கிழமை காலை 6 மணிக்கு இரு திரையரங்குகளிலும் படம் திரையிடப்பட்டது.

இதில் தம்மம்பட்டி பாலம் அருகேயுள்ள ஒரு திரையரங்கில் ரசிகா்கள் ரூ. 250 கட்டணம் கொடுத்து திரைப்படம் பாா்க்க சென்றுள்ளனா். ஆனால் அங்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக படம் சரிவர தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகா்கள் தகராறில் ஈடுபட்டனா். செருப்புகளை எடுத்து வீசியதால் திரைச்சீலை கிழிந்தது. இதையடுத்து திரைப்படம் திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து போலீஸாா் ரசிகா்களை சமாதானப்படுத்தினா். ரூ. 250 டிக்கெட் கட்டணத்தில் அனைவருக்கும் ரூ. 150 உடனடியாக திருப்பியளிக்கப்பட்டது. எஞ்சிய ரூ. 100 க்கு டோக்கன் வழங்கி, பின்னா் வந்து திரைப்படத்தை காணுமாறு கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT