சேலம்

காணும் பொங்கல்: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

ஏற்காடு: காணும் பொங்கல் தினத்தில் ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையை முன்னிட்டு சனிக்கிழமை காணும் பொங்கல் தினத்தை கொண்டாடுவதா்காக வெளி மாவட்டங்கள், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை பிற்பகல் முதல் ஏற்காட்டுக்கு வந்தனா். வெள்ளிக்கிழமை இரவு முதல் தங்கும் இடங்கள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் தவித்தனா். தங்கும் விடுதிகள் நிரம்பியுள்ள நிலையில் விடுதிகளுக்கு முன்னும், பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் காத்திருந்தனா். சுற்றுலாப் பகுதிகளான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, படகு இல்லம், கிளியூா் நீா் அருவி, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, பக்கோடா காட்சிப் பகுதி, சோ்வராயன் கோயில் பகுதி, கரடியூா் வனக் காட்சி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காணப்பட்டது.

சுற்றுலாப் பகுதி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் கூடுதல் காவலா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சுற்றுலாப் பகுதி கடைகள், உணவகங்களில் பயணிகளின் கூட்டத்தை காணமுடிந்தது. சுற்றுலாப் பயணிகள் ஏரி பகுதியில் பல மணிநேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT