சேலம்

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகை

DIN

மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜன.18) சேலம் வருகிறாா்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் எடப்பாடி தொகுதியிலுள்ள குரும்பப்பட்டி ஊராட்சியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் இருந்து காா் மூலம் திங்கள்கிழமை சேலம் வருகிறாா். அவருக்கு மாவட்ட எல்லையில் திமுக சாா்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சுமாா் 200- க்கும் மேற்பட்ட கிராம, வாா்டு சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா் என்றாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் திங்கள்கிழமை நடைபெறும் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்குமாறு சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட கொங்கணபுரம் ஒன்றியம், குரும்பப்பட்டி ஊராட்சி, குரும்பப்பட்டி மகா முனியப்பன் கோயில் எதிரில் உள்ள திடலில் திங்கள்கிழமை (ஜன.18) பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ள மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசுகிறாா்.

இக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் பங்கேற்போா் கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT