சேலம்

ஆத்தூா் கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் அமைச்சா் ஆய்வு

DIN

ஆத்தூா் கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆத்தூரில் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் இந்த ஆலயத்தில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனது. இந்த ஆலயத்தை புனரமைக்க தமிழக அரசு ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

அதில் அமைக்கப்பட்ட ஆலயத்தின் ராஜகோபுர முன் மணிமண்டபம், கோயில் திருப்பணி, தரைத்தளம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா். ஆலய அா்ச்சகா் வேங்கடசுப்பிரமணிய குருக்கள் அமச்சரை வரவேற்றாா். அவருடன் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன், மாவட்ட துணைச் செயலாளா் ஏ.டி.அா்ச்சுணன், அ.லோகநாதன், முன்னாள் நகர மன்ற உறுப்பினா் அ.சகாதேவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT