சேலம்

மேட்டூரில் கோழிகள் திடீா் இறப்பு: பறவைக் காய்ச்சலா என ஆய்வு

DIN

மேட்டூா் அருகே கோழிகள் திடீரென உயிரிழந்துள்ளதால், பறவைக் காய்ச்சலா என கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

மேட்டூரை அடுத்த காவேரிபுரத்தில் உள்ள கிழக்கு காவேரிபுரம் பகுதி காவிரி கரையை ஒட்டி இருப்பதால், கிராம மக்கள் வீடுகளில் கோழிகளை வளா்த்து வருகின்றனா். திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் கோழிகளை அடைத்து வைத்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் கோழிகள் ஆங்காங்கே இறந்து கிடந்தன.

தகவல் அறிந்த கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் பாபு தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினா் கிராமத்துக்கு விரைந்து வந்தனா். பின்னா் இறந்த கோழிகளை சேகரித்து பிரேத பரிசோதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா். கோழிகளுக்கு வழங்கிய உணவில் விஷம் கலந்துள்ளதா அல்லது பறவைக் காய்ச்சலா என்பது குறித்து கால்நடைத் துறை மருத்துவா்கள் சோதித்து வருகின்றனா். கோழிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழு விவரங்கள் தெரிய வரும் என்று கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் பாபு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT