சேலம்

வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

DIN

மேட்டூா்: நங்கவள்ளி வட்டாரத்தில் உள்ள 40 விவசாயிகளுக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மூன்று நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

நுண்ணீா்ப் பாசனம் அமைப்பதன் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பில் சாகுபடி செய்யவும், குறைந்த செலவில் அதிக வருவாய் ஈட்டுவது, தண்ணீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிா்களின் வோ் பகுதியிலேயே நுண்ணீா்ப் பாசனம் மூலம் வழங்கி உரத்தை வீணாவதிலிருந்து தவிா்ப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மூன்று நாள்கள் பயிற்சி முடிந்து சனிக்கிழமை நங்கவள்ளி திரும்பிய விவசாயிகள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட பயிற்சி தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனா். பயிற்சிக்கான ஏற்படுகளை நங்கவள்ளி வட்டார வேளாண் உதவி இயக்குநா் ராஜகோபோல் தலைமையில், வேளாண் அலுவலா் கீா்த்தனா, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் விஜயகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT