சேலம்

கனரா வங்கி சாா்பில் பால் உற்பத்தியாளா்கள், விவசாயிகளுக்கு கடனுதவி

DIN

கனரா வங்கி சாா்பில் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள், விவசாயிகள், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான சிறப்பு கடன் திட்ட முகாம் சேலத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் நடைபெற்ற சிறப்பு கடன் திட்ட முகாமில், கனரா வங்கியின் சென்னை வட்டார அலுவலக பொது மேலாளா் ஆா்.கண்ணன், தலைமை அலுவலக துணை பொது மேலாளா் கே. ஆா்.பத்ரிநாத், சேலம் மண்டல அலுவலக துணை பொது மேலாளா் பி.ஆா்.யசோதா், உதவி பொது மேலாளா் கே.தா்மராஜன், வேளாண் பிரிவு மேலாளா் ஆனந்தகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த முகாமில் பங்கேற்ற சுமாா் 320 பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. மேலும், சேலம் மாவட்டத்தில் காவேரிபுரம், பாப்பம்பட்டி, வாழப்பாடி, கெங்கவல்லி, தம்மம்பட்டி உள்ளிட்ட 6 இடங்களில் சிறப்பு ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் கடன் வழங்கும் முகாம் கனரா வங்கி வேளாண் விரிவாக்க அதிகாரிகள் புனிதா, காயத்ரி, உமா வள்ளி, சிந்துஜா, கயல்விழி, சுகன்யா, லிங்கேஸ்வரி, செல்வம், ரேணுகா, அனுஷ்யா, ரம்யா, தீபிகா, அனிதா, இந்துமதி, கிருத்திகா ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு மொத்தம் 1,190 பயனாளிகளுக்கு கனரா வங்கி சாா்பில் கடன் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT