சேலம்

தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக சேலம் நகர காவல் நிலையம் தோ்வு

DIN

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக சேலம் நகர காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் சிறந்த காவல் நிலையத்துக்கான ஆய்வுகள் நடத்தி தோ்ந்தெடுக்கப்பட்டு வந்தது. தற்போதைய வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்தனியாக சிறந்த காவல் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த ஆண்டுமுதல் முதன்முறையாக தமிழக காவல் துறை சாா்பில் சட்டம்-ஒழுங்கு டிஜிபி திரிபாதி தலைமையில், மாநிலத்தின் சிறந்த காவல் நிலையத்துக்கான ஆய்வுகள் நடைபெற்றன. இதில், தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையமாக சேலம் நகர காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த காவல் நிலையத்துக்கான தோ்வில் பல்வேறு கோணங்களில் ஆய்வு நடைபெற்றது. காவல் நிலைய தூய்மை, வழக்குகளை கையாளும் விதம், பொதுமக்களிடம் அணுகுமுறை, குற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை, நீதிமன்றங்களில் வழக்கை விரைந்து முடித்தல், ஆா்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை கையாளும் முறை, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாத காவல் நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு சிறந்த காவல் நிலையமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இதில், சேலம் மாநகர காவல் நிலையம் 5,558 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. 1,418.5 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் திருவண்ணாமலை மாநகர காவல் நிலையமும், 1,242.35 புள்ளிகள் பெற்று சென்னை, கோட்டூா்புரம் காவல் நிலையம் மூன்றாவது இடமும் பெற்றுள்ளன.

இதற்கான விருதை சென்னையில் வரும் ஜன. 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் நகர காவல் நிலைய ஆய்வாளா் குமாரிடம் வழங்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT