சேலம்

வாழப்பாடியில் நடமாடும் சாலை பாதுகாப்பு கண்காட்சி: இலவச கண்சிகிச்சை முகாம்

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் பேருந்தில் வடிவமைக்கப்பட்ட நடமாடும் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் இலவச கண்சிகிச்சை முகாம் திங்கட்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் கோட்டத்தின் சாா்பில், 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டி, சாலை விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த காட்சி படங்களை பேருந்தில் வடிவமைத்து நடமாடும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடமாடும் கண்காட்சி பேருந்து திங்கட்கிழமை வாழப்பாடி வந்தடைந்தது. ஏராளமான பயணிகளும் பொதுமக்களும் கண்டுகளித்தனா்.

வாழப்பாடி கிளை மேலாளா் முரளி, உதவி பொறியாளா்கள் முத்துக்குமாா் சீனிவாசன், போக்குவரத்து ஆய்வாளா் சுப்பிரமணி ஆகியோா் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.முன்னதாக, வாழப்பாடி கிளை பணிமனை வளாகத்தில், சேலம் வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் தொழில் நுட்ப பணியாளா்கள் 70 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. படவரி:கே.எம்.03: வாழப்பாடியில் நடமாடும் சாலை பாதுகாப்பு கண்காட்சியை பாா்வையிட்ட பொதுமக்கள்.கே.எம்.04: துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தி போக்குவரத்துக்கழக அலுவலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT