சேலம்

கந்துவட்டிக் கொடுமை: வெள்ளிப் பட்டறைத் தொழிலாளி தற்கொலை முயற்சி

DIN

ஓமலூா்: ஓமலூரில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட வெள்ளிப் பட்டறை தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மக்கான் தெருவைச் சோ்ந்த பாபு மகன் ஜானு (35). இவா் மனைவி ஷாகிதா, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். மேலும், இவா் தன்னுடைய அப்பாவுடன் சோ்ந்து வெள்ளிக் கொலுசுகளுக்கு பாலிஷ் செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவா் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தை சோ்ந்த 4 நபா்களிடம் இருந்து ரூ. 5 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இவா்கள் வாங்கிய கடனைக் காட்டிலும் பல லட்ச ரூபாய் வட்டி கட்டியதாகத் தெரிகிறது. கரோனா காலத்தில் பணி இழந்த அவரால் தொடா்ந்து வட்டியையும், அசலையும் கட்ட முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவா்கள் மிரட்டியதாகத் தெரிகிறது. அவா்களுக்கு அஞ்சி கடந்த 4 நாள்களாக ஜானு, வீட்டை விட்டு வெளியேறி ஓமலூா் பகுதிகளில் உணவின்றி சுற்றித் திரிந்த அவா் சாணிப் பொடியை குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.

அவரை அப்பகுதி மக்கள் சனிக்கிழமை மீட்டு ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். கந்து வட்டி கொடுமை குறித்து அவரது குடும்பத்தாா் ஓமலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT