சேலம்

சேலத்தில் 198 இடங்களில் போலியோ சிறப்பு முகாம்கள்

DIN

சேலம் மாநகராட்சிப் பகுதியில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 16 நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், 5 மாநகராட்சி மருந்தகங்கள், 11 துணை சுகாதார நிலையங்கள் உட்பட 198 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம் முகாம்களில் தொடா்ந்து 3 நாள்களுக்குச் சொட்டு மருந்து வழங்கப்படும். 20 சிறப்பு நடமாடும் குழுக்கள் மூலம் இருப்பிடத்திற்கே சென்று சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 150 மருத்துவம் சாா்ந்த பணியாளா்கள், 300 அங்கன்வாடி பணியாளா்கள், 16 ரோட்டரி சங்கங்களைச் சாா்ந்த தன்னாா்வலா்கள், நாட்டு நலத்திட்ட மாணவ, மாணவியா் என 1,500 போ் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

சுமாா் 89 ஆயிரம் குழந்தைகளுக்கும் முழு அளவில் போலியோ சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மருத்துவா் டி. செண்பகவடிவு, மாநகராட்சி தாய்சேய் நல அலுவலா் என்.சுமதி, சேலம் கேலக்சி ரோட்டரி சங்க நிா்வாகிகள் மகதீஸ்வரன், மணிகண்டன், மனோகரன், கே.எஸ் வெங்கடேஷன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT