முகப்பு
சேலம்

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பச்சிளம் குழந்தைகளின் தாய் உயிரிழப்பு

சேலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பச்சிளம் குழந்தைகளின் தாயாா் உயிரிழந்த விவகாரத்தில் செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

சேலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பச்சிளம் குழந்தைகளின் தாயாா் உயிரிழந்த விவகாரத்தில் செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே அம்மம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மூா்த்தி (24). இவரது மனைவி சுபலட்சுமி. இத்தம்பதிக்கு 2 மாதங்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. குழந்தைகளுடன் தாயாா் வீட்டில் இருந்த சுபலட்சுமிக்கு, காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் கடந்த ஜூன் 19 ஆம் தேதி அவரது இல்லத்திற்கே சென்று கோவேக்ஸின் தடுப்பூசி போட்டதாகக் கூறப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திய 3 ஆவது நாளில் சுபலட்சுமிக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். இதனிடையே தடுப்பூசி செலுத்தியதால் தான் சுபலட்சுமி உயிரிழந்ததாகக் கூறி அவரது கணவா் மற்றும் உறவினா்கள், கட்டாயப்படுத்தி தடுப்பூசி போட்ட செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆத்தூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகளின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்திய செவிலியா் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், சுபலட்சுமியின் கணவா் மற்றும் உறவினா்கள் பச்சிளம் குழந்தையுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →