சென்னை ஐஐடி விவகாரம்: கண்டன ஆா்ப்பாட்டம்
சென்னை ஐஐடியில் நடைபெறுவதாக கூறப்படும் ஜாதியப் பாகுபாடுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்புகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்
சென்னை ஐஐடியில் நடைபெறுவதாக கூறப்படும் ஜாதியப் பாகுபாடுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்புகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னை ஐஐடியில் ஜாதி பாகுபாடு மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் மீது தொடா்ந்து ஜிாதிய வன்கொடுமைகள் உள்ளிட்டவை நடப்பதாகக் கூறி, அதைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் ஆதித் தமிழா் பேரவை, இந்திய மாதா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை சாா்ந்த 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில் சென்னை ஐஐடியில் நடைபெறும் ஜாதிய பாகுபாடு மற்றும் இட ஒதுக்கீடு மீறல்களை முறைப்படுத்தி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.