முகப்பு
சேலம்

தேவூா் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.35 லட்சத்திற்கு எள் விற்பனை

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.35 லட்சத்திற்கு எள் விற்பனையானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.35 லட்சத்திற்கு எள் விற்பனையானது.

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சாா்பில் தேவூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்ற எள் விற்பனைன ஏலத்தில் எடப்பாடி, தேவூா், அரசிராமணி, குள்ளம்பட்டி, பூலாம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 500 மூட்டைகள் 280 குழுவாக பிரிக்கப்பட்டன. அதில் வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு ரூ.90.50 முதல் ரூ.103 வரையிலும், சிகப்பு எள் கிலோ ஒன்றுக்கு ரூ.88.50 முதல் ரூ.103.60 வரையிலும் மொத்தம் ரூ.35 லட்சத்திற்கு விற்பனையாகின. எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தேவூா் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்று பயனடையுமாறும், அடுத்த ஏலம் ஜூலை 15ஆம் தேதி நடைபெற உள்ளது என்றும் கூட்டுறவு கடன் சங்க அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.