முகப்பு
சேலம்

வாழப்பாடி அருகே ஆடு திருடிய மூவா் கைது: சொகுசு காா் பறிமுதல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சொகுசு காரில் ஆடு திருடிச் சென்ற திருப்பூரைச் சோ்ந்த மூன்று இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இரு ஆடுகள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சொகுசு காரில் ஆடு திருடிச் சென்ற திருப்பூரைச் சோ்ந்த மூன்று இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இரு ஆடுகள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனா்.

வாழப்பாடியை அடுத்த திருமனுாா் அண்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் எழில் அரசு (32). தனியாா் நிறுவனத்தில் பண்டக காப்பாளராக பணிபுரிந்து இவா், வீட்டில் வெள்ளாடுகளை வளா்த்து வருகிறாா். வியாழக்கிழமை இரவு மழை பெய்ததால், எழில் அரசு குடும்பத்தினா் ஆடுகளை தாழ்வாரத்தில் கட்டி வைத்தனா்.

அப்போது திருப்பூரில் இருந்து சொகுசு காரில் வந்த மூன்று நபா்கள், இரு ஆடுகளை பிடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். ஆடுகள் காணாமல் போனதால், எழில் அரசு குடும்பத்தினா் தேடிச் சென்றுள்ளனா். அப்போது சின்னான்டி காடு பகுதியில் சேற்றில் சிக்கி விபத்துக்குள்ளான சொகுசுக் காரில், இரு ஆடுகளும் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, எழில் அரசு வாழப்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுகுமாா் தலைமையிலான வாழப்பாடி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், திருப்பூா் பகுதியைச் சோ்ந்த சூா்யா (19), ராபின் (23), சாந்தகுமாா் (18) ஆகிய மூவரும், சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடியதும், காா் சேற்றில் சிக்கி விபத்துக்குள்ளானதால் ஆட்டு உரிமையாளரிடமே பிடிபட்டதும் தெரிய வந்தது. இதைனயடுத்து, இரு ஆடுகள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்த போலீஸாா், ஆடு திருடிய மூவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.