சேலம்

சேலம் மாநகராட்சிப் பகுதியில் ஆணையாளா் ஆய்வு

DIN

சேலம் மாநகராட்சிப் பகுதியில் மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம், அஸ்தம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட வின்சென்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.

தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா, சமூக இடைவெளியைப் பின்பற்றி உடனுக்குடன் தடுப்பூசி செலுத்தப்படுகிா என்பதைக் கேட்டறிந்தாா்.

அதைத்தொடா்ந்து, மணக்காடு காமராஜா் மகளிா் மேல்நிலைப் பள்ளி, அம்மாபேட்டை மண்டலத்துக்குள்பட்ட பாவடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், அம்மாபேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் அண்ணா மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் முகாமையும் அவா் ஆய்வு செய்தாா்.

அம்மாபேட்டை மண்டலம், அய்யாசாமி பசுமை வெளிப்பூங்கா வளாகத்துக்குச் சென்ற ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ், நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்களிடம் பூங்கா வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகள் எவ்வாறு உள்ளது என்றும், பூங்காவை மேம்படுத்துவது, கூடுதலாக உடற்பயிற்சி உபகரணங்களை அமைப்பது குறித்துக் கேட்டறிந்தாா்.

அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுடன் சோ்ந்து இறகுப்பந்து விளையாடினாா்.

அதைத்தொடா்ந்து அம்மாபேட்டை மண்டல அலுவலகத்துக்குச் சென்று அங்கு சுகாதாரப் பணிகள், அடிப்படை வசதிகள் குறித்து மண்டல உதவி ஆணையாளருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆய்வில் உதவி ஆணையாளா்கள் எம்.ஜி.சரவணன், பி.சண்முக வடிவேல், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT