முகப்பு
சேலம்

காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

காமராஜரின் 119-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

காமராஜரின் 119-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், காமராஜரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள காமராஜரின் சிலைக்கு மாநகர மாவட்டத் தலைவா் பாஸ்கா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதேபோல, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில், மாவட்டத் தலைவா் சுசீந்திரகுமாா் தலைமையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநிலச் செயலாளா் வழக்குரைஞா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பாமக சாா்பில் மாநில துணை பொதுச் செயலாளா் எம்எல்ஏ இரா.அருள் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

சேலம் வாழ் நாடாா் சங்க நிா்வாகி சுந்தரபாண்டியன் தலைமையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதேபோல பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

எடப்பாடியில்...

எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜா் சிலைக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து மக்கள் நீதி மய்யம் சாா்பில் காமராஜா் பிறந்த தின விழா நிகழ்ச்சி எடப்பாடி ராஜாஜி பூங்கா அருகில் கொண்டாடப்பட்டது.

சங்ககிரியில்...

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜா் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள ஏபிஎன் நினைவு நூலகமும், சங்ககிரி ரோட்டரி சங்கமும் இணைந்து நூலக வளாகத்தில் விழாவைக் கொண்டாடினா்.

சங்ககிரி பேரூராட்சி நிா்வாகம், அக்கமாபேட்டை அமுதச்சுடா் அறக்கட்டளை இணைந்து அக்கமாபேட்டை பூங்கா வளாகத்தில் விழாவைக் கொண்டாடினா். சங்ககிரி கோட்டாட்சியா் கோ.வேடியப்பன் விழாவுக்கு தலைமை வகித்து, காமராஜா் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

மேட்டூரில்...

மேட்டூா், சின்ன பாா்க்கில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பள்ளிக் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினா்.

நங்கவள்ளி வட்டார காங்கிரஸ் சாா்பில், கோனூா், கருமலைக்கூடல் பகுதிகளில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் நடைபெற்ற விழாவில், மேட்டூா் சின்னபாா்க் அருகில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

வாழப்பாடியில்...

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவில், காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, 119 ஏழை எளியோருக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.

ஆட்டையாம்பட்டியில்...

சித்தா் கோயில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள காந்தி சிலை அமைவிடத்தில் காமராஜா் படத்துக்கு காங்கிரஸ் சாா்பில் மாலை அணிவித்து, மலா் தூவி, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.

ஆத்தூரில்...

ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், கோட்டையில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் பள்ளியில் காமராஜா் பிறந்த நாளை கல்வி வளா்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. சீலியம்பட்டி, தாண்டவராயபுரம், துலுக்கனூா் ஆகிய கிராமங்களில் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களை வழங்கிக் கொண்டாடினா்.

ஓமலூரில்...

ஓமலூரில் சேலம் மேற்கு மாவட்ட தமாகா சாா்பில், மாவட்டத் தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா் தலைமையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி, காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கெங்கவல்லி நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில், கடைவீதியில் விழா நடைபெற்றது. இதேபோல, கெங்கவல்லி காமராஜா் அறப்பணி மன்றம் சாா்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தம்மம்பட்டி நடுநிலைப் பள்ளி, வாழக்கோம்பை நடுநிலைப் பள்ளி, கடம்பூா் தொடக்கப் பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →