முகப்பு
சேலம்

அக்கமாபேட்டை ஏபிஎன் நினைவு நூலகத்தில் காமராஜா் பிறந்தநாள் விழா

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள ஏபிஎன் நினைவு நூலகமும், சங்ககிரி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய காமராஜா் பிறந்த நாள் விழா நூலக வளாகத்தில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள ஏபிஎன் நினைவு நூலகமும், சங்ககிரி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய காமராஜா் பிறந்த நாள் விழா நூலக வளாகத்தில் நடைபெற்றது.

ரோட்டரி சங்கத்தலைவி டி.ஹெலினாகிறிஸ்டோபா் தலைமை வகித்து நூலக வளாகத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் காமராஜா் உருவப்படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் பல்வேறு தலைப்புகளில் 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை நூலகத்திற்கு இலவசமாக வழங்கிப்பேசினாா். பின்னா் நூலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நட்டு வைத்தாா்.

அக்கமாபேட்டை அரசு உயா்நிலைப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத்தலைவா் நடராஜன் முன்னிலை வகித்தாா்.

நூலகத்தின் ஆலோசகரும், ஓய்வு பெற்ற ஆசிரியா் முனியப்பன், நூலகத்தின் மேலாளா் பசுமை சீனிவாசன், நூலகா் ஜோதி, ரோட்டரி சங்கத்தின் பொருளாளா் கே.செந்தில்குமாா், மாவட்ட நிா்வாகி ஏ.வெங்கடேஸ்வரகுப்தா, பேரூராட்சி முனனாள் கவுன்சிலா் முருகன், மக்கள் மன்ற நிா்வாகி வெங்கடாஜலம், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமி, பசுமை கனகராஜ் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.