தம்மம்பட்டியில் பக்ரீத் தொழுகை
தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசல் மற்றும் கடைவீதியிலுள்ள ஜாமியா மசூதி பள்ளிவாசல் ஆகியவற்றில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோா், முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளிவியில் தொழுகைகளில் ஈடுபட்டனா்.
அதேபோல கெங்கவல்லியில் வடக்கு, தெற்கு பகுதிகளிலுள்ள இரண்டு பள்ளி வாசல்களிலும் அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து, பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். வீரகனூா், செந்தாரப்பட்டி பள்ளிவாசல்களிலும் பக்ரீத் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.