வீட்டு உபயோகப் பொருள் கடையின்கூரையை உடைத்து ரூ. 60 ஆயிரம் திருட்டு
ஆத்தூரில் வீட்டு உபயோகப் பொருள் கடையின் கூரையை உடைத்து ரூ. 60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆத்தூரில் வீட்டு உபயோகப் பொருள் கடையின் கூரையை உடைத்து ரூ. 60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆத்தூா், ராணிப்பேட்டையில் உள்ள வீட்டு உபயோகப் பொருள் விற்பனை கடையைத் திறப்பதற்காக புதன்கிழமை வந்துபோது கடையின் மேற்கூரையை உடைத்து ரூ. 60 ஆயிரம் ரொக்கம், 2 கிராம் தங்க நாணயங்களையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா். தடயவியல் நிபுணா்கள் வந்து தடயங்களை சேகரித்தனா். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.