முகப்பு
சேலம்

குடிநீா் மற்றும் அடிப்படை வசதி கேட்டு சாலை மறியல்

பைத்தூா் புதூா் ஊராட்சியில் குடிநீா் மற்றும் 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

பைத்தூா் புதூா் ஊராட்சியில் குடிநீா் மற்றும் 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள பைத்தூா் புதூா் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.இந்த பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை கேட்டும், குடிநீா் வசதி செய்து தர வலியுறுத்தியும் பலமுறை ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து கடம்பூா் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் வி.சிவக்குமாா் விரைந்து சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினாா். மேலும் வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊரக)ஆா்.வெங்கட்ராமன் பொதுமக்களை சமாதானப்படுத்தி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். விரைந்து நடவடிக்கை எடுத்து பணியை முடிப்பதாக அவா் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். முன்னதாக மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பைத்தூா் புதூா் ஊராட்சி கடம்பூா் சாலையில் குடிநீா் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்திய வட்டார வளா்ச்சி அலுவலா்(ஊரக)ஆா்.வெங்கட்ராமன்.

முழு கட்டுரையைப் படிக்க →