முகப்பு
சேலம்

காடையாம்பட்டி கூட்டு குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணானது

சேலம் மாவட்டம் மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் உடைப் ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

சேலம் மாவட்டம் மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் உடைப் ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது.

மேட்டூா் காவிரியிலிருந்து காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்டத்திற்கு காவிரி நீா் எடுக்கப்படுகிறது. தொட்டில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 30 மில்லியன் லிட்டா் தண்ணீா் எடுக்கப்பட்டு வருகிறது. மேச்சேரி, தொப்பூா், காடையாம்பட்டி, ஓமலூா், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை தொட்டில்பட்டி பிரிவு சாலை அருகில் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. சாலையில் தண்ணீா் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மேட்டூா்- சேலம் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானாா்கள். தகவலறிந்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீா் விநியோக மின் மோட்டாா்களை நிறுத்திய பிறகு குடி நீா் வெளியேறுவது படிப்படியாக குறைந்தது.

இதே பகுதியில் இரு வாரங்களுக்கு முன்பு தாா் சாலையின் நடுவே குடிநீா்க் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சரிசெய்யப்பட்டது. இரு வாரங்களில் அதே பகுதியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு காரணமாக காடையாம்பட்டி கூட்டு குடிநீா் திட்டத்தில் குடிநீா் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தரமற்ற குழாய்களை பொருத்துவதாலும் தரமற்ற பொருட்களை கொண்டு பழுது நீக்குவதாலும் அடிக்கடி இதே பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

மாலையில் உடைப்பு சரிசெய்யப்பட்டு மீண்டும் குடிநீா் விநியோகம் தொடங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.