சேலம்

தினமணி செய்தி எதிரொலி: தொல்லியல்துறை சாா்பில் தகவல் பலகை வைப்பு

DIN

தினமணி செய்தி எதிரொலியாக சங்ககிரி கோட்டையின் நுழை வாயிலில் தொல்லியல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தகவல் பலகை வைத்துள்ளனா்.

சங்ககிரி மலைக்கோட்டை நுழைவாயில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி மாலை முன்னறிவிப்பின்றி திடீரென பூட்டப்பட்டதால் சுவாமியை வழிபட சென்றவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதுகுறித்த செய்தி தினமணியில் ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) நுழைவாயில் முன்பு தொல்லியல் துறையினா் தகவல் பலகை வைத்துள்ளனா்.

இத்தகவல் பலகையில் இந்திய அரசு, இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை சங்ககிரி கோட்டை, நேரம் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை மட்டும் என்று உள்ளது. இது பொதுமக்கள், பக்தா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

இத் தகவல் பலகையில் கோட்டையைப் பாா்வையிடுவதற்கான நேரம், இந்தியத் தொல்லியல் துறையின் அலுவலக முகவரி, அவசர தொடா்புக்கு அதிகாரிகளை தொடா்பு கொள்ளவேண்டிய செல்லிடப் பேசி எண்களையும் குறிப்பிட்டு தகவல் பலகையை வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT