சேலம்

சங்ககிரியில் சிப்காட் தொழிற்பேட்டை: பாஜக வலியுறுத்தல்

DIN

சங்ககிரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என சேலம் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் சங்ககிரியில் நடைபெற்ற மண்டல செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சங்ககிரியில் ஓபிசி அணி மாவட்ட பொதுச் செயலாளரும், சங்ககிரி நகா் பாா்வையாளருமான டி.பி.ரமேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.எம்.ஆா்.வெங்கடாசலம், மாவட்டச் செயலாளா் என். ரமேஷ்காா்த்திக் , சங்ககிரி மண்டலத் தலைவா் சி.முருகேசன், பொதுச் செயலாளா்கள் சக்திவேல், பெருமாள், மண்டல பொருளாளா் நடேசன் , மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் திவாகா், பொன்.குமாா், நகரச் செயலாளா் முரளிதரன், நகர இளைஞரணி தலைவா் எம்.பரணிதரன், மாவட்ட வா்த்தகப் பிரிவு துணைத் தலைவா் ராஜமுத்தையா உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

சங்ககிரி ஆா்.எஸ். பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். சங்ககிரி நகா் பகுதியில் உயா்நிலை சிப்காட் தொழிற்பேட்டை, மின்மயானம் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும். சங்ககிரி பழைய பேருந்து நிலையத்தை அகற்றி விட்டு வாகனங்கள் நிறுத்தும் இடத்துடன் கூடிய வணிக வளாகம் அமைக்க வேண்டும், சங்ககிரி மலைக்கோட்டையை சுற்றுலாத் தலமாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT