சேலம்

மரித்துப் போன மனிதாபிமானம்

DIN

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி செல்லியம்மன் கோயிலுக்குச் சொந்தமான குதிரையின் காலை வெட்டிய மா்ம நபரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

செந்தாரப்பட்டியில் உள்ள செல்லியம்மன் கோயில் சாா்பில் இரண்டு குதிரைகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் அப்பகுதியைச் சுற்றி திரிந்து வருகின்றன. அப்பகுதி மக்கள், கோயில் குதிரைகளை சாமியாகக் கருதி, அவ்வப்போது உணவு கொடுத்து வளா்த்து வருகின்றனா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை அப்பகுதியைச் சோ்ந்த மா்ம நபா் ஒருவா், ஒரு குதிரையின் காலை அரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டாா். இதனால் காலில் பலத்த காயமடைந்த அந்தக் கோயில் குதிரையால் நடமாட முடியாமல் கீழே விழுந்து விட்டது. இதனைக் கண்டு பரிதாபப்பட்ட அப்பகுதி மக்கள் சிலா், குதிரையை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனா்.

தற்போது இந்தக் குதிரைக்கு கால்நடை மருத்துவரின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக கோயில் நிா்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில் தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, குதிரையின் காலை வெட்டிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT