தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு உறுதிமொழி
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு உறுதிமொழியை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கதிரவன் தலைமையில் வியாழக்கிழமை எடுத்துக் கொண்டனா்
ஆத்தூரில் நகராட்சி, நகர காவல் துறை, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, ஆத்தூா் மளிகை கடை வியாபாரிகள் சங்கம் இணைந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு உறுதிமொழியை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கதிரவன் தலைமையில் வியாழக்கிழமை எடுத்துக் கொண்டனா்.
இதில், தடை செய்யப்பட்ட பான்மசாலா,குட்கா பொருள்களை விற்பனை செய்ய மாட்டோம் என தெரிவித்து, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன், செயலாளா் அஜ்மல் ஷெரீப், ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.ஏ.திருப்பதிராஜா, அ.மணிகண்டன், கண்ணன், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இம்மானுவேல் ஞானசேகரன், நகர காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா், ஆவின் செல்வமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.