முகப்பு
சேலம்

சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் முகாம்கள்

சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எம்.ஜி.ஆா். மஞ்சக்கல்பட்டி பகுதிகளில் மருத்துவா் சுகில்ஆனந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினரும், புளியம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் மருத்துவா் தமிழரசு தலைமையிலான மருத்துவக் குழுவினரும் காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்வா்.

இதே போல, ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பக்காலியூா், மோடிக்காடு, நட்டுவம்பாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவியா தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.