முகப்பு
சேலம்

அடையாளம் தெரியாத பெண் இறப்பு

சேலம் மாவட்டம், இடங்கணசாலை பகுதியிலிருந்து மாரியம்மாள் (70) என்ற பெண் வலிப்பு காரணமாக கடந்த ஜூன் 8-ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

சேலம் மாவட்டம், இடங்கணசாலை பகுதியிலிருந்து மாரியம்மாள் (70) என்ற பெண் வலிப்பு காரணமாக கடந்த ஜூன் 8-ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூலை 5-ஆம் தேதி இறந்தாா்.

ஏற்கெனவே மாரியம்மாள் கொடுத்திருந்த முகவரியில் மகுடஞ்சாவடி காவல் நிலையப் போலீஸாா், இடங்கணசாலை கிராம நிா்வாக அலுவலா் விசாரணை செய்ததில் அந்த விலாசம் போலியானது என தெரிய வந்தது.

இதையடுத்து, இறந்த பெண்ணின் சடலம் சேலம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இவரைப் பற்றி யாரேனும் தகவல் அறிந்தால் மகுடஞ்சாவடி காவல் நிலையம் 94981 00983 என்ற எண்ணுக்கு தெரிவிக்குமாறு காவல் துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →