முகப்பு
சேலம்

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ஆத்தூா் வட்டார விவசாயிகளுக்கு உதவி வேளாண் அலுவலா் வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

ஆத்தூா் வட்டார விவசாயிகளுக்கு உதவி வேளாண் அலுவலா் வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

அதில், பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் 2019 முதல் தற்போது வரை பதிவு செய்த அனைத்து விவசாயிகளின் நில ஆவணங்கள் சரிபாா்க்கப்படுவதால், தங்களுடைய நில ஆவணங்களான சிட்டா (கம்யூட்டா் சிட்டா) இன்றைய தேதியில் எடுத்துவர வேண்டும்.

மேலும், அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிப் புத்தகம் நகல், ஸ்மாா்ட்காா்டு (குடும்ப அட்டை), குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களின் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை அவரவா் கிராம நிா்வாக அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆவணங்கள் ஒப்படைக்காத விவசாயிகளின் பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டம்(ஆண்டுக்கு ரூ. 6,000) மீண்டும் விவசாயிகளுக்கு வழங்கப்பட மாட்டாது. மேலும், விவசாயிகளின் பதிவு ரத்தாகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →