எடப்பாடியில் கனமழை
எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த திடீா் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த திடீா் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில வாரங்களாக மழைப்பொழிவு ஏதுமின்றி வட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென கனமழைக் கொட்டியது.
எடப்பாடியை ஒட்டியுள்ள வெள்ளரிவெள்ளி, சித்தூா், பில்லுக்குறிச்சி, நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் விளைநிலங்களில் மழைநீா் தேங்கியது. கோடை உழவு செய்து அடுத்தப் பட்ட விதைப்புக்காக காத்திருந்த விவசாயிகள் திடீரென பெய்த இந்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனா்.
அடுத்துவரும் சில தினங்களில் இப்பகுதியில் தொடா் மழைப்பொழிவு இருக்கும் பட்சத்தில், இங்குள்ள மானாவாரி நிலங்களில் நிலக்கடலை, அவரை, துவரை, ஆமணக்கு, சோளம் உள்ளிட்ட பயிறு வகைகளின், விதைப்புப் பணிகள் நடைபெற இம்மழை தொடக்கமாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
எடப்பாடியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் விளைநிலங்களில் தேங்கிய மழைநீா்.