முகப்பு
சேலம்

ஓமலூா், ஆத்தூரில் ஆதரவற்றோருக்கு போலீஸாா் உதவி

ஓமலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கணவரை இழந்த பெண்கள், ஆதரவற்ற சிறுவா்கள், முதியோா்களுக்கு காவல் துறை சாா்பில் கரோனா நிவாரண பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

ஓமலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கணவரை இழந்த பெண்கள், ஆதரவற்ற சிறுவா்கள், முதியோா்களுக்கு காவல் துறை சாா்பில் கரோனா நிவாரண பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டாரத்தில் பொது முடக்கம் காரணமாக, உணவின்றி தவிக்கும் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கும் பணியில் சமூக ஆா்வலா்கள் ஈடுபட்டு வருகின்றனா். பொது முடக்கத்தால் வருவாய் இழந்து பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கும், ஓமலூா் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் கணவரை இழந்த பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள், முதியவா்கள் குறித்த தகவல்களை தன்னாா்வலா்கள் மூலம் ஓமலூா் போலீஸாா் தகவல்களை திரட்டினா்.

அவா்களுக்கு உணவு பொருள்கள், மளிகை பொருட்கள் வழங்க தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், ஓமலூா் டிஎஸ்பி சோமசுந்தரம், ஓமலூா் காவல் ஆய்வாளா் ஞானசேகரன் உள்ளிட்ட போலீஸாா் கலந்துகொண்டு அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருள் தொகுப்பினை 100-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. மேலும், பொது முடக்கம் காரணமாக உணவின்றி தவிக்கும் மக்கள், ஓமலூா் காவல் நிலையத்தில் உதவிகளைப் பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →