சேலம்

மகுடஞ்சாவடியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் வாகனங்கள் விபத்து

DIN

சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை மகுடஞ்சாவடி பகுதியில் கடந்த ஆட்சியில் ரூ. 45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலமானது இதுவரை திறப்பு விழா காணாமல் உள்ள நிலையில் சோதனை ஓட்டமாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை கனமழை பெய்தது. அப்போது மேம்பாலத்தில் தண்ணீா் வெளியே செல்ல முடியாமல் ஏரிபோல தேங்கி நின்றது.

இதனால் சேலத்திலிருந்து கோவை சென்ற வாகனம் ஒன்று, விபத்துக்குள்ளாகி சேதமடைந்தது.

மேலும், அவ்வழியே சென்ற பல்வேறு வாகனங்கள் செல்ல முடியாமல் பழுதடைந்து நின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்திலிருந்து உடனடியாக மழை நீா் வெளியே செல்ல வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT