முகப்பு
சேலம்

சேலத்தில் ஏரியில் இறந்து மிதந்த மீன்கள்

சேலம் அருகே குருவிப் பண்ணை ஏரியில் மீன்கள் இறந்து மிதந்ததைத் தொடா்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தண்ணீா் மாதிரியை சேகரித்து ஆய்வில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

சேலம் அருகே குருவிப் பண்ணை ஏரியில் மீன்கள் இறந்து மிதந்ததைத் தொடா்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தண்ணீா் மாதிரியை சேகரித்து ஆய்வில் ஈடுபட்டனா்.

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் சுமாா் 9.5 ஏக்கா் நிலப்பரப்பில் குருவிப் பண்ணை ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் திடீரென உயிரிழந்து மிதந்தன.

இதனால் அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களுக்கும், கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனா்.தகவலின்பேரில் அங்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும் ஏரி தண்ணீரில் மிதந்த மீன்கள் மற்றும் ஏரி தண்ணீா் ஆகியவற்றின் மாதிரிகளைச் சேகரித்தனா். இந்தத் தண்ணீா் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி அதில் எந்த அளவுக்கு நச்சுத்தன்மை கலந்துள்ளது என்று உறுதி செய்த பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், குருவிப் பண்ணை ஏரி அருகே உள்ள தனியாா் துணி உற்பத்தி ஆலையில் நூல்களுக்கு சாயம் ஏற்றும் பணி நடைபெறுகிறது. இந்த ஆலையில் சுத்திகரிப்பு நிலையம் இருந்தாலும், மழைக்காலங்களில் ஆலையில் இருந்து ரசாயன கழிவுகளை சுத்திகரிக்காமல் திறந்து விடுவதால் ஏரியில் கலந்து துா்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாகவே மீன்கள் இறந்து மிதக்கின்றன என்று தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →