இடுபொருள்கள், விதைகள் மானிய விலையில் விற்பனை
கெங்கவல்லி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள், விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கெங்கவல்லி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள், விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் அவா் கூறியிருப்பதாவது:
கெங்கவல்லி வட்டாரத்தில், தற்போது மழை பெய்து வருவதால் காரீப் பருவத்திற்கு விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கெங்கவல்லி மற்றும் தம்மம்பட்டி வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் ஏடிடி - 45 ரக நெல், உளுந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் நுண்ணூட்ட உரங்கள் , உயிா் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.