முகப்பு
தமிழ்நாடு

குடியரசுத் தலைவர் முர்முவுடன் மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு

மேற்கு வங்க ஆளுநராக அண்மையில் பதவியேற்றுக்கொண்ட ஆர்.என். ரவி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை திங்கள்கிழமை சந்தித்தார்.

Updated On : 16 மார்ச், 2026 at 7:40 AM
குடியரசுத் தலைவர் முர்மு - மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி.
பகிர்:

மேற்கு வங்க ஆளுநராக அண்மையில் பதவியேற்றுக்கொண்ட ஆர்.என். ரவி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை திங்கள்கிழமை சந்தித்தார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் புகைப்படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி குடியரசுத் தலைவர் மாளிகையில் பவனில் சந்தித்தார் என்று குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க ஆளுராக ஆர்.என்.ரவி மார்ச் 12ஆம் தேதி பதவியேற்றார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் முர்முவை அவர் சந்தித்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் தேதிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன.

மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 இடங்களுக்கு ஏப்.23-ஆம் தேதி, மீதமுள்ள 142 இடங்களுக்கு ஏப்.29-ஆம் தேதி என இருகட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 மேற்கு வங்க பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில், இம்முறை வெறும் 2 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.

summary

Newly appointed West Bengal Governor R N Ravi on Monday called on President Droupadi Murmu at the Rashtrapati Bhavan.

முழு கட்டுரையைப் படிக்க →