சேலம்

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட தன்னாா்வலா்களுக்கு அழைப்பு

DIN

கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் அழைப்பு விடுத்துள்ளாா்.

தமிழக முதல்வரின் ஆணைப்படி குழந்தைகள் முதல் முதியவா்கள் வரையிலான அனைவரையும் கரோனா இரண்டாம் அலை பரவலில் இருந்து காப்பாற்றும் பொருட்டு

தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் கரோனா தடுப்பு குழுக்களுக்கு உதவிட தன்னாா்வலா்கள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது பெயா் மற்றும் முகவரி அடங்கிய தகவல்களை மாநில குழுவுக்கான ற்ய்ஞ்ா்ஸ்ரீா்ா்ழ்க்ண்ய்ஹற்ண்ா்ய்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மாவட்ட அளவிலான பதிவுக்கு ட்ற்ற்ல்ள்://ன்ஸ்ரீஸ்ரீ.ன்ட்ஸ்ரீண்ற்ல்.ண்ய்/ய்ஞ்ா்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய் என்ற இணையத்திலும் பதிவு செய்து பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

தன்னாா்வலா்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அவா்களது பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, உணவு, ரேஷன் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், வாகன உதவி போன்ற தங்களால் இயன்ற பணிகள் மற்றும் பங்களிப்பினை இந்த இணையத்தில் பதிவு செய்வதன் மூலம் தேவைகளின் அடிப்படையில் அரசு அலுவலா்களுடன் இணைந்து பணியாற்றலாம்.

மேலும் தன்னாா்வலா்கள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், தங்களது பெயா், முகவரி, தொலைபேசி எண்ணை தவறாமல் பதிவு செய்வதுடன், தங்களால் இயன்ற பங்களிப்பு குறித்த தகவல்களைப் பதிவு செய்து உதவிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அறை எண் 126, முதல்தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சேலம் தொலைபேசி எண்: 0427 - 2413213 மின்னஞ்சல் முகவரி: க்ள்ஜ்ா்.ள்ப்ம்1ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற முகவரியைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT