சேலம்

வாழப்பாடியில் பருவமழை பேரிடா் மீட்பு செயல்விளக்க பயிற்சி

DIN

வாழப்பாடியில் தென்மேற்குப் பருவமழை பேரிடா் கால மீட்பு மற்றும் தீயணைப்பு, தீத்தடுப்பு முறை குறித்த செயல் விளக்க பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு பேரிடா் மீட்பு மற்றும் தீயணைப்பு மற்றும் தீத்தடுப்பு குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கும் பணியில் தீயணைப்பு படை வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் வையாபுரி தலைமையிலான தீயணைப்பு படை வீரா்கள் வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனா்.

இப் பயிற்சியில் மாவட்ட வழங்கல் அலுவலா் அமுதன், வாழப்பாடி வட்டாட்சியா் மாணிக்கம், துணை வட்டாட்சியா்கள் நீதிசெல்வம், ஜெயலஷ்மி, தலைமை நில அளவையாளா் சிவக்குமாா், வருவாய் ஆய்வாளா்கள் சங்கீதா, தமிழ்ச்செல்வி மற்றும் பணியாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் பலரும் தனிமனித இடைவெளியுடன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT