முகப்பு
சேலம்

கெங்கவல்லியில் தோ்தல் அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம்

கெங்கவல்லியில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான மண்டல தோ்தல் அலுவலா்களுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை கெங்கவல்லியில் நடைபெற்றது.

Updated On : 3 மார்ச், 2021 at 12:00 AM
பகிர்:

கெங்கவல்லியில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான மண்டல தோ்தல் அலுவலா்களுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை கெங்கவல்லியில் நடைபெற்றது.

கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி உதவித் தோ்தல் அலுவலா் முருகையா கூட்டத்துக்கு தலைமை வகித்தாா்.கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன், ஆத்தூா் டி.எஸ்.பி.இமானுவேல் ஞானசேகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் தொகுதி முழுவதும் விளம்பரம் பேனா்கள், கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், அரசியல் தலைவா்களின் சிலைகளை மூடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதில் தோ்தல் துணை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், காவல் ஆய்வாளா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.